இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 198 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கொழும்பில் தொடங்கிய டெஸ்டில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆப்கான் அணியில் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜட்ரான் இரண்டவது பந்திலேயே ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நூர் அலி ஜட்ரான் வெளியேறினார். பின்னர் விஷ்வா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ மற்றும் பிரபத் ஜெயசூரியாவின் மும்முனை தாக்குதலில் விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆப்கானிஸ்தான் 198 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 13 பவுண்டரிகள் விரட்டி 91 ஓட்டங்கள் குவித்தார். விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளும், பிரபத் ஜெயசூரியா, அசிதா பெர்னாண்டோ தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
திமுத் கருணாரத்னே 42 (37) ஓட்டங்களுடனும், நிஷான் மதுஷ்கா 36 (48) ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.