ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்சின் இறுதி வார்த்தைகள்

171

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ். இவர் உலக வரலாற்றில் அமெரிக்க டொலர் 700 பில்லியன் பெறுமதியான தனது நிறுவனத்தின் சொத்துக்களை விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் இறக்கும் தருவாயில் அவர் கூறிய வார்த்தைகள் பலரையும் கண்கலங்கச் செய்துள்ளன.

அவர், தன்னுடைய தொழில் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத இடத்தை தான் எட்டியது உண்மையென்றால், அதே போல் நான் பட்ட கஷ்டங்களும் உண்மைதான்.

நான் அடைந்த வெற்றி உண்மையில்லை என்பதை இறுதி நேரத்திலாவது எனக்கு தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

இப்போது என்னுடைய மரணப்படுக்கையில் இருந்து கொண்டு, தன்னுடைய கடந்த காலத்தை நினைத்துப்பார்க்கையில், நான் தேடிய சம்பாதித்த புகழ், செல்வம் அனைத்தும் மரணத்தின் பிடியில் அர்த்தமற்றதாகிவிட்டது.

இந்த நேரத்தில் நான் உணர்வது என் அருகில் அமர்ந்திருக்கும் மரணத்தை. எனது வாழ்க்கைக்கு தேவையான செல்வங்களை தேடிக்கொண்டு உறவுகள், கலை, எனது சிறுபராய கனவுகளை அடைய முயற்சி செய்திருக்க வேண்டும்.

அளவுக்கு அதிகமான எனது பொருளீட்டல் எதனையும் அனுபவிக்க முடியாத திருப்புமுனையில் என்னை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என்று உருக்கமாக கூறியுள்ளார்.

இறைவன் தாம் எல்லோருக்கும் அன்பு என்ற ஒன்றை கொடுத்துள்ளார். அதை நாம் வீணாக்கிவிடாமல், தாம் வாழும் காலத்தில் அதை அதிகமாக பகிர்ந்து கொள்ள வேண்டும், செல்வங்களை அல்ல என்று கூறியுள்ளார்.

ஒன்று கூறவேன்டுமென்றால் நாம் சேர்த்து வைத்த செல்வங்கள் எல்லாவற்றை நம்மால் கொண்டு செல்ல முடியாது, ஆனால் நாம் பகிர்ந்து கொண்ட அன்பினை கொண்டு செல்ல முடியும்.

அவை தான் தன்னுடைய இறுதி தருணத்தில், இந்த இருட்டறையிலும் எனக்கு வெளிச்சத்தையும் நம்பிக்கையையும் தருகின்றது.

இந்த உலகில் சிறிது கால வாழ்க்கை எல்லை இல்லாதது. எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், முயற்சி இருந்தால் எந்த சிகரத்தையும் கூட தொடலாம்.

ஆனால் அன்பு என்பது பல்லாயிரம் மைல்கள் எம்முடன் பயணிக்கக்கூடிய உணர்வு. அது எமது இதயத்திலும் கைகளிலும் உள்ளது. உலகின் அதி கூடிய பெறுமதியான படுக்கை நான் இப்போது படுத்திருக்கும் படுக்கை என்னால் எல்லாவற்றுக்கும் பணத்தை கொண்டு ஆட்களை அமர்த்த முடிந்தது.

ஆனால் எனது நோயை சுமக்க எனது பணத்தை கொண்டு என்னால் யாரையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. எந்த ஒரு பொருளையும் நாம் இழந்தால் மீண்டும் பெற்றுக்கொள்ளவோ தயாரித்து கொள்ளவோ முடியும்.

ஆனால், எம்மால் இழந்தால் பெற்றுக்கொள்ள முடியாத ஒன்று எமது வாழ்வு. வாழ்வில் எந்த ஒரு காலகட்டத்தில் நாம் இருந்தாலும், மரணத்திரை எப்போது விழும் என்று எமக்கு தெரியாது. தெரிந்தாலும் எம்மால் தடுக்க முடியாது.

குடும்பத்தினர் மீதும், குழந்தைகள் மீதும், உறவினர்கள் மீதும் அன்பு காட்டுவதுடன் உங்கள் ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்துங்கள் என்று தன்னுடைய மரணபடுக்கையின் போது இறுதி வார்த்தைகளை ஸ்டீவ் உறுக்கமாக கூறியுள்ளார்.

SHARE