ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள iPhone X Plus எனும் புதிய கைப்பேசி

250

ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசிக்கு பலத்த வரவேற்பு காணப்பட்டதை தொடர்ந்து இவ் வருடம் iPhone X Plus எனும் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது புகைப்படம் உட்பட சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 6.5 அங்குல அளவுடையதும் OLED தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான திரையினை உடையதாக இக் கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டுவல் பிரதான கமெராவினையும் கொண்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

SHARE