முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த 102 இராணுவத்தினரும் இன்று முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மஹிந்த ராஜபக்ச சாதாரண ஜனாதிபதி கிடையாது எனவும் அவர் யுத்தத்தை வெறி கொண்டு சமாதானத்தை பெற்றுக் கொடுத்தவர் என்றும் நேற்று கிருலப்பனையில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் பிவிதுரு ஹெல உறுமயவுன் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் எனவே அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் அவர் தெரிவித்திருந்தார்.