ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கக்கோரி ஸ்ரீபாத தேசிய கல்லூரியில் கவனயீர்ப்புப் பேரணி

232

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கக்கோரி ஸ்ரீPபாத தேசிய ஆசிரிய பயிற்சி கல்லூரியில் கவனயீர்ப்புப் பேரணியொன்று 17.10.2016 அதாவது இன்றைய தினம் இடம்பெற்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளவுயர்வு பேச்சுவார்த்தை இழுபறியிலுள்ள நிலையில் ஆயிரம் ரூபாய் சம்பளத்தைக் கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஸ்ரீPபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆசிரியர் பயிலுனர்களால் காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு பேரணியொன்று கல்லூரி வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஆசிரியர் பயிலுனர்களாகிய நாங்கள் பெற்றோர்களின் பங்களிப்பினூடாகவே கல்வித்துறை முன்னெடுக்கப்படவேண்டியுள்ளது. பொருளாதார ரீதியில் பாதிப்புக்குள்ளான பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 75 நாள் வேலை வாய்ப்புடன் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கவேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர். அமைதியான முறையில் தமது ஆதரவினைத் தெரிவிக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து பதாதைகள் ஏந்தியவாறு ஆசிரியர் பயிலுனர்கள் அனைவரும் இவ்ஆர்;ப்பாட்டத்தில் பங்குகொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed-1

unnamed

SHARE