ஆரம்பிக்கலாமா?..தளபதி 68 குறித்து பேசிய படக்குழு

104

 

வஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 68படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படம் 3D VFX டெக்னாலஜியில் உருவாகி வருகிறது. இதற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர். அஜித்திற்கு எப்படி மங்காத்தா படத்தை கொடுத்தாரோ அதேபோல தளபதி விஜய்க்கும் ஹிட் கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அப்டேட்
இந்நிலையில் வெங்கட் பிரபு தனது லியோ என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நாம் இனி ஆரம்பிக்க வேண்டும் என்று தளபதி 68 படத்தின் அப்டேட் குறித்து பேசியுள்ளார்.

SHARE