பாகிஸ்தானுக்கு எதிரான தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் சதமடித்துள்ளனர்.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா அணி 31 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 214 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டேவிட் வோர்னர் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் சற்றுமுன்னர் சதங்களை கடந்தனர்.
டேவிட் வோர்னர் 7 நான்கு ஓட்டங்கள் மற்றும் 6 ஆறு ஓட்டங்களுடன் 101 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறார்.
அதேபோல், மிட்சல் மார்ஸ் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 7 ஆறு ஓட்டங்களுடன் 107 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறார்.