பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற லிஸ்டில் ஓவியா, ஆரவ், ஜூலி, ரைசா ஆகியோர் உள்ளனர்.
வழக்கமாக யாருக்கு ரசிகர்களின் ஓட்டுகள் குறைவாக வருகிறதோ அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இது பற்றி பேசிக்கொண்டிருந்த ஓவியா அரவ்விடம் “இந்த வீட்டில் இருக்கும் ஒரே friend நீதான்..நான் தான் லூசு மாதிரி உன்ன லவ் பன்னேன்.. ஆன உனக்குத்தான் லவ் இல்லையே. சரி ஓகே.. உன்ன வெளியே அனுப்ப விடமாட்டேன்” என கூறிவிட்டு, கேமராவை பார்த்து “மக்களே இவருக்கு ஓட்டு போடாதீங்க.. சாரி சாரி.. போடுங்க”என சிரித்துக்கொண்டே சொன்னார்.
இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படப்போவதில்லை என ஏற்கனவே கமல் அறிவித்துவிட்டு நிலையில், அது போட்டியாளர்களுக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.