கடந்த 2008ஆம் ஆண்டு ஆரையம்பதி பிரதேசத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு மீதான இரு முக்கிய எதிரிகளுக்குரிய சுருக்க முறையற்ற விசாரணை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் நடைபெற்று முடிவடைந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் முகத் தோற்றளவில் குறித்த குற்றம் தொடர்பான தீர்ப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் நடைபெற்ற முகத் தோற்றளவிலான விசாரணை நிறைவடைந்த நிலையில் அதற்கான விசாரணையை எதிர்கால விசாரணையின் நிமித்தம் கொழும்பு உயர் நீதிமன்றுக்கு பாரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களுக்கான விசாரணைக்காக முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளுக்கு முதல் உயர் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பிணையில் கொழும்பு உயர் நீதிமன்றுக்கு செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள மூன்றாவது மற்றும் நான்காவது எதிரிகளுக்கு உயர் நீதிமன்று பிணை வழங்கவில்லை.
கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் அரசாங்கப் பாடசாலை ஒன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் மற்றும் பெண் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சி பொதுச் செயலாளரான பூ.பிரசாந்தன் 2015.10.23 அன்று கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரது சகோதரர் பூ.ஹரனும் கைது செய்யப்பட்டு, இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.