நாட்டில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் நாளைய (15) தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்படவுள்ளனர்.
அண்மையில் ஊடகவியலாளர் ஒருவரை, கடற்படையினர் தாக்கியமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகத் தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும், குறித்த ஆர்ப்பாட்டம் நாளைய தினம் கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்பாக காலை 11 மணியளவில் இடம்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அங்கு சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.