ஆர்ப்பாட்டம் வேண்டாம், 730 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது, வேலைக்குச் செல்லுங்கள் – அமைப்பாளர் பெ.பிரதீபன்

250

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார். 06.10.2016 அதாவது இன்றைய தினம் அட்டனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 05.10.2016 அன்று தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, முதலாளிமார் சம்மேளனம், கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவர்களுக்கிடையில் நடைபெற்ற சம்பள பேச்சுவார்த்தையில் 620 ரூபாவாக இருந்த அடிப்படை சம்பளம் 730 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 110 ரூபாய் சம்பளவுயர்வு கிடைத்துள்ள நிலையில் மேலதிக கொடுப்பனவுகளுடன் 800 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளத்தொகையைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவுள்ளது.

இந்நிலையில் மலையகம் தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். அரசியல் சுயநலத்திற்கான பொய்ப் பிரச்சாரங்களை தொழிலாளர் மத்தியில் செய்யும் அரசியல்வாதிகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

unnamed

SHARE