வருகிற ஆகஸ்ட் 19ம் தேதி ஸ்ரீகாந்த், சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் நம்பியார்.
இப்படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வெளிவர முடியாமல், கடைசியில் எப்படியோ முயற்சி செய்து வெளியீடுகிறார் ஸ்ரீகாந்த். இப்படத்தில் விஜய் ஆண்டனி , ஆர்யா போன்றவர்கள் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி அவரது பாடலுக்கு நடனம் ஆடுவது போல் வருவார், ஆர்யா எனது நண்பனாக நடித்துள்ளார்.
நான் படப்பிடிப்பு முடித்து பிறகு மச்சி உனக்கு எவ்ளோ பேமெண்ட் என்று கேட்டேன். உடனே எனக்கு செம டோஸ் விட்டான், அதெல்லாம் இங்கே சொல்லவே முடியாது. இந்த துறையில் முக்கியமாக சம்பாதித்தது இந்த மாதிரியான நட்பு தான். எப்போதும் நான் மறக்க மாட்டேன் என்றார்.