தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான, இளம் நடிகர்களில் ஒருவர் ஆர்யா. இவர் சினிமாவை தாண்டி அதிகம் நேசிப்பது விளையாட்டு சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்திருக்கும் ஆர்யா தற்போது கன்னட படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
ராஜராதா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அனுப் பந்தர் இயக்க கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளிலும் சேர்ந்து தயாராக இருக்கிறது.
கடந்த சனிக்கிழமை முதல் ஆர்யா இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.