ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக இலங்கை சென்றுள்ளார். அங்கு தினமும் இவரால் பரபரப்பு தான் நிகழ்ந்து வருகின்றது.
அனுமதி வாங்காமல் அவர் படப்பிடிப்பு நடத்தியது, எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு எதிராக மக்கள் கிளம்பியது என பரபரப்பிற்கு பஞ்சமில்லை.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி போட்டியாளர் சுசானாவுடன் ஆர்யா ஊர் சுற்றி வருவதாகவும் ஒரு செய்தி பரவியது, முதலில் அவர் சுசானாவின் வீட்டிற்கு சென்றார் என கூறப்பட்டது.
தற்போது அவர் சுசானாவுடன் ஊர் சுற்றி வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது, எது எப்படியோ ஆர்யா இலங்கையில் சந்தோஷமாக ஊர் சுற்றி வருகின்றார் என்பது உறுதி.
மேலும், இவர் ஜப்னாவில் உள்ள அனலை தீவு பகுதிக்கு இவர் சுசானாவுடன் சென்றதாக ரசிகர்கள் கூறியது மட்டுமில்லாமல், ஒரு சில புகைப்படங்களும் வெளிவந்துள்ளது.