தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ் தொலைக்காட்சி நடிகை திவ்யாவை திருமணம் போவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். அதன்பிறகு அவர்களது திருமணம் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதால் ஆர்.கே. சுரேஷ் திருமணம் நின்றுவிட்டதாக நிறைய நாளிதழ்களில் செய்திகள் வெளியிட்டுவிட்டனர்.
இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷ்- திவ்யா தரப்பில் கூறுவதாவது, ஜாதகத்தில் சில பிரச்சனைகள் இருப்பதால் தற்போதைக்கு திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
அடுத்த வருடம் அவர்களது திருமணம் நடக்கும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.