ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை அணி ?

116

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக 2:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இவ் விரு அணிகளுக்கிடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 3:0 என்ற கணக்கில் வெற்றயீட்டு கைப்பற்றியுள்ளதுடன், இதில் ஒரு போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டது.

இதில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டத்தினால் டக்வெத் லூயிஸ் முறையிலும், மூன்றாவது போட்டியில் 7 விக்கெட்டுக்களினாலும், நான்காவது போட்டியிலும் 18 ஓட்டத்தினால் டக்வெத் லூயிஸ் முறையில் வெற்றி பதிவு செய்தது.

இந் நிலையில் மூன்று போட்டிகளையும் வெற்றி கொண்டு பலமிக்கதொரு அணியாக திகழும் இங்கிலாந்து அணியை இன்று இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியிலாவது இலங்கை அணி வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறுமா என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

இன்று களமிறங்கவுள்ள தினேஷ் சந்திமல் தலைமையிலான இலங்கை அணிக் குழாமில் நிரோஷன் திக்வெல்ல, சண்டீர சமரவிக்ரம, குசல் மெண்டீஸ், தனஞ்சய டிசில்வா, தசூன் சானக்க, திஸர பெரேரா, அகில தனஞ்சய, லசித் மலிங்க, அமில அப்பன்ஷோ, கசூசன் ராஜித, உபுல் தரங்க, துஷ்மந்த சமீர, நுவான் பிரதீப் மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஈயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக் குழாமில் ஜோஸ் பட்லர், ஜோசன் ரோய், அலெக்ஸ் அலீஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, கிரிஸ் வோக்ஸ், டொம் குரன், அடில் ரஷித், ஒலி ஸ்டோன், ஷெம் குரன், ஜோ டென்லி, மார்க்வூட் மற்றும் லியாம் பிளன்கட் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இங்கிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட்டுக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஐயாயிரம் ஓட்டங்களை கடப்பதற்கு இன்னும் 64 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.

அவர் இன்றைய போட்டியில் 64 ஓட்டங்களை பெறும் பட்சத்தில் வேகமாக ஐயாயிரம் ஓட்டங்களை கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE