நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக தனது பதவியை ஏற்றுள்ள நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் 10.01.2016 அன்று வாகன பவனி ஊடாக மூவர்ண கொடி ஏந்திய வண்ணம் ஊர்வலமாக கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயம், கொட்டகலை நகரில் அமைந்துள்ள விகாரை போன்றவற்றிக்கு விஜயத்தை மேற்கொண்டு தரிசனம் பெற்ற பின் அட்டன் மாநகரிற்கு அதே வாகன பவனி ஊடாக வரவழைக்கப்பட்டார்.
இங்கு ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்ட பின் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் விகாரைக்கு சென்று தரிசனம் மேற்கொண்டு, நகரின் மத்தியில் அமைக்கப்பட்டடிருந்த வரவேற்பு இடத்திற்கு வருகை தந்தார்.
அங்கு நகர வர்த்தகர்கள் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களால் ஆறுமுகன் தொண்டமானுக்கு பொன்னாடைகள் போர்த்தி மலர் மாலைகள் அணிவித்து பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ் வரவேற்பு வைபவத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)