ஆறு வீரர்கள் டக் அவுட்! மே.தீவுகளின் புயல் வேகத்தில் சுருண்ட வங்கதேசம்

149

 

ஆன்டிகுவாவில் தொடங்கிய டெஸ்டில், மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி 103 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மேற்கிந்திய தீவுகள்-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி , மேற்கிந்திய தீவுகளின் ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரோச் ஓவரில் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய ஷாண்டோ ரன் ஏதும் எடுக்காமல் ரோச் ஓவரில் கிளீன் போல்டானார். பின்னர் வந்த மொமினுல் விக்கெட்டை ஜேடன் சீலெஸ் கைப்பற்ற, லித்தன் தாஸ் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், கேப்டன் ஷகிப் அல் ஹசன் தனியாக போராடினார்.

ஜேடன் சீலெஸ், அல்ஸாரி ஜோசப் இருவரும் மாறி மாறி தாக்குதல் நடத்தியதில், வங்கதேச அணி 103 ஓட்டங்களுக்கு சுருண்டது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் மட்டும் 67 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தரப்பில் ஜேடன் சீலெஸ், அல்ஸாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளும், ரோச் மற்றும் மேயெர்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். வங்கதேச அணியில் மொத்தம் ஆறு வீரர்கள் டக் ஆகினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ஓட்டங்கள் எடுத்தது. கேப்டன் பிராத்வெயிட் 42 ஓட்டங்களுடனும், போன்னெர் 12 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

SHARE