உயிருக்காக போராடிக்கொண்டிருந்த பெண் ஒருவரை அலரல் சத்தத்தை கேட்ட பிரதேச மக்கள் மீட்டுள்ளனர்.
காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றில் நோர்வுட் பகுதியிலே 12.05.2016 அதிகாலை 4 மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீயூட்டன் தோட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டார்.
கெசல்கமுவ ஒயா ஆற்றுப்பகுதியில் காப்பாற்றுங்கள் என சத்தம் கேட்ட நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த பிரதேசமக்கள் ஆற்றுப்பகுதியில் ஆபத்தான நிலையில் கற்பாரைக்கிடையில் சிக்குண்ட நிலையில் கிடந்த குறித்த பெண்ணை மீட்டடதுடன் நோர்வூட் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர் சம்பவயிடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் குறித்த பெண் மனநிலை பாதிக்கப்படுள்ளவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்