
சுவாசிக்கும் போது நாம் மேலோட்டமாக சுவாசித்தால், நமது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் மட்டும் தான் கிடைக்கும்.
ஆனால் அதுவே நாம் ஆழமாக சுவாசிக்கும் போது, அதிகமான ஆக்ஸிஜன் நம் உடலுக்குள் சென்று உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
ஆழமாக சுவாசிப்பதால் கிடைக்கும் நன்மைகள்?
- சிறுநீர் கழித்தல், மலம் கழிப்பதல் மற்றும் வியர்த்தல் ஆகியவற்றின் மூலம் வெளியேற்றப்படும் நச்சுக்கள், நமது சுவாசம் வழியாகவும் வெளியேறுகிறது. எனவே ஆழமாக சுவாசிப்பது நல்லது.
- ஆழமான சுவாசம் தசைகளை விரிவடையச் செய்து, மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை அமைதியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. எனவே மன அழுத்தமாக இருக்கும் போது மேலோட்டமான சுவாசம் சிறந்தது.
- நம் உடலுக்கு தேவையான ஆற்றல், நம்முடைய ஆழமான சுவாசத்தின் போது, உண்டாகும் ஆக்ஸிஜன் மூலம் கிடைக்கிறது. இந்த ஆழமான சுவாச பயிற்சியை பின்பற்றி வந்தால், மூச்சுத் திணறல் பிரச்சனைகள் ஏற்படாது.
- ஆறு மாதம் தொடர்ந்து ஆழமாக சுவாசப் பயிற்சியை பின்பற்றி வந்தால், புகைப்பிடிக்கும் பழக்கம் தானாகவே போய்விடும் என்று யோகா பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.
- ஆழமான சுவாசத்தை தினசரி பழக்கப்படுத்திக் கொண்டால், அது நுரையீரலில் ஏற்படும் சளி, சைனஸ் மற்றும் மார்பு நெரிசல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
- நம் உடம்பில் உள்ள ரத்தத்தை தூய்மையாக்க ஆழமான சுவாசம் உதவுகிறது. இந்த ஆழமான சுவாசப் பயிற்சியை செய்வதால், ரத்த அணுக்கள் அதிகமான ஆக்சிஜனை உடலுக்கு எடுத்து சென்று உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.