ஆழ்வார் பட இயக்குனரின் அடுத்தப்படம் ரெடி- அஜித் வருவாரா?

227

அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரும் தோல்வியை சந்தித்த படம் ஆழ்வார். இப்படத்தை அறிமுக இயக்குனர் செல்லா என்பவர் இயக்கியிருந்தார்.

அதன் பிறகு அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை, இந்நிலையில் ஒரு முகத்திரை என்ற படத்தில் ரகுமான் ட்ரீட்மெண்ட் கொடுக்கும் பேஷண்டாக நடித்தவர் சுரேஷ்.

இவர் மலேசியாவில் வெளியாகும் பல தமிழ், ஹிந்தி படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்தவர்.

சுரேஷ் அடுத்து சோலோ ஹீரோவாக நடிக்கவுள்ளாராம், இந்த படத்தை ஆழ்வார் படத்தின் இயக்குனர் செல்லா தான் இயக்கவுள்ளார்.

மேலும், இப்படத்தின் ஆடியோ ரிலிஸிற்கு அஜித்தை அழைக்க இருக்கின்றோம் என கூறி மேலும் அதிர்ச்சியை உண்டு செய்தார் சுரேஷ்.

SHARE