நடிகர், ஆக்ஷன் இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர், திரைக்கதையாசிரியர், தொழில் நடத்துபவர், பாடகர் மற்றும் சண்டைக் கலைஞர். மார்ஷியல் ஆர்ட் கலைஞர் என்று பன்முகத்திறன் கொண்டவர்தான் ஜாக்கி சான்.
ஹாங்காங்கில் 1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி சீன உள்நாட்டுப் போர் அகதிகளான சார்லஸ் (Charles) மற்றும் லீ-லீ சான் (Lee-Lee Chan) ஆகிய தம்பதியருக்கு பிறந்தார் ஜாக்கி, இவரது இயற்பெயர் “சான் காங் சாங்” ஆகும். இவர் பிறக்கும் போது அதிக எடையுடன் இருந்ததால் இவருக்கு, பீரங்கிக் குண்டு என்று செல்லப்பெயரும் உண்டு.
பிறந்ததிலிருந்து தற்போதுவரையான ஜாக்கியின் வாழ்க்கைப் பணயம் மிகவும் சுவாரசியமனது. ஆஸ்கார் விருதை பெறப்போகும் ஜாக்கி சான் கடந்துவந்த பாதையை சற்றே மீட்டுப்பார்ப்போம்…