ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

152

 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை வென்று அரினா சபலென்கா, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சீனாவின் குயின்வென் ஜெங்குடன் மோதினார்.

இதில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இது இவரது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE