இங்கிலாந்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகம்

230

 

இங்கிலாந்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இத்தகைய அதிகரிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் சுகாதார தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மாத்திரம் 4820 தற்கொலை மூலமான இறப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையானது 2016 ஆம் ஆண்டில் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், தற்கொலைகளை தடுக்கும் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களால் அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த புதிய திட்டங்கள் புத்தாண்டில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறிருக்க தற்கொலைகளை தடுப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக ஆபத்தில் இருப்பவர்களை ஆதரவுடன் அணுகத்தக்க வகையிலான குழு ஒன்று இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

SHARE