இங்கிலாந்தின் Tyne & Wear பிராந்தியத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 11 சிறுவர்கள் நாய் கடித்து காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Tyne & Wear பிராந்தியத்தின் Northumberland பகுதியில் உள்ள Blyth பூங்காவில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது, நேற்று (புதன்கிழமை) மாலை 6.30 மணிளவில் ஸ்டேஃபோர்ஷெயர் புல் டெரியர் வகை நாய் சிறுவர்களைக் கடித்துள்ளது.
இதனையடுத்து காயங்களுக்கு இலக்கான சிறுவன் ஒருவனின் தந்தை நிதானமாகவும் துரிதமாகவும் செயற்பட்டு, குறித்த நாயைப் பிடித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நாயை பிடித்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து நாயை கட்டுப்பாட்டிற்குள் வைக்கத் தவறியமை மற்றும் ஆபத்தான நாயை வளர்த்தமை ஆகியவை தொடர்பில், குறித்த நாயின் உரிமையாளரான 37 வயதான பெண்ணை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட சிறுவர்களில் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது