
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளிச் சிறுவனின் IQ அளவு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் IQ அளவை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு இங்கிலாந்தில் வசிக்கும் அர்னவ் சர்மா என்ற 11 வயது சிறுவனின் IQ அளவு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் IQ அளவைவிட இரண்டு புள்ளிகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
“Mensa test” என்னும் IQ அளவை சோதிக்கும் தேர்வு கடந்த வாரமளவில் நடைபெற்றுள்ளது.
குறித்த தேர்வில் அர்னவ் சர்மா எதுவும் படிக்காமல் கடினமான இந்த IQ தேர்வுக்கு முகம்கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, இந்தத் தேர்வில் அர்னவ் வெற்றி பெற்றுள்ளார்..
இந்த முறை நடத்தப்பட்ட IQ தேர்வில் அர்னவ் 162 புள்ளிகள் பெற்று மென்சா புத்திசாலிகள் க்ளப்பில் உறுப்பினராகி உள்ளார் .
இந்த புள்ளிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் IQ அளவை விட இரண்டு புள்ளிகள் அதிகம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.