இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் மொயின் அலியின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி 498 ஓட்டங்கள் குவித்தது.
இங்கிலாந்து- இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நடக்கிறது.
இங்கிலாந்து அணி தொடக்க நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மொயீன் அலி 28 ஓட்டங்களுடனும், கிறிஸ்வோக்ஸ் 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் வோக்ஸ்(39), பிராட்(7), மறுபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயின் அலி 2வது சதம் எட்டினார்.
இலங்கை அணியின் ஹெராத் பந்துவீச்சு சுழலில் ஸ்டீபன் பின் சிக்கினார், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 498 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது, மொயின் அலி(155), ஆண்டர்சன்(5) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து பந்துவீச்சில் திணறியது, ஆண்டர்சன் வேகத்தில் கருணாரத்னே(9), சண்டிமால்(4) ஆட்டமிழந்தனர், கிறிஸ் வோக்ஸ் பந்தில் அணித்தலைவர் மேத்யூஸ்(3), குசால் மெண்டிஸ்(35), சிறிவர்தனா(0) ஆட்டமிழந்தனர்.
ஸ்டூவர்ட் பிராட் வேகத்தில் கவுசால்சில்வா(13), ஹெராத்(12), எரங்கா(2) பெவிலியன் திரும்பினர்.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 91 ஓட்டங்கள் எடுத்தது.