இங்கிலாந்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

224

இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண் ஒருவருக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சேலி தாம்சன்(39). காலை உணவாக அவித்த முட்டை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது நறுக்கென்று ஒன்று அவர் பல்லில் சிக்கியது. அது என்னவென்று பார்த்தபோது குபிக் சிர்கோனியா( Cubic Zirconia) என்ற ஒரு வகை வைரக்கல் இருந்தது. இதை பார்த்ததும் ஆச்சர்யமடைந்தார்.

தனக்கு கிடைத்த வைரம் குறித்து அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ள பலதரப்பிலிருந்தும் முட்டைக்குள் வைரக்கல் எப்படி சிக்கியிருக்கலாம் என்பதற்கான விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

அடுத்த மாதம் எனக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது. இதற்காக நான் உடல் எடையைக் குறைக்க தினமும் அவித்த முட்டை சாப்பிடுகிறேன்.

அதேபோல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது ஏதோ ஒன்று கடினமான பொருள் என் வாயில் பட்டதை உணர்ந்தேன்.

அதை வெளியில் துப்பிவிட்டேன். அதில் பளபளவென்று ஒரு சிறிய கல் மின்னியது. சுத்தம் செய்து பார்த்தால் அது ஒரு வைரக்கல். எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது என்று கூறினார்.

கீழே விழுந்து கிடந்த வைரத்தை பண்ணையில் இருந்த கோழி விழுங்கியிருக்க கூடும். பின்னர் அந்தக் கல், செரிமாணம் ஆகாமல் முட்டைக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எது எப்படியோ வைரம் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளார் சேலி தாம்சன்.

SHARE