இசட்10 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

233
5.99 இன்ச் 1440×720 பிக்சல் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, மெல்லிய பெசல்கள், 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி பிரைமரி கேமரா, PDAF, எல்இடி ஃபிளாஷ், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், ஆன்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 3.2, டூயல் நானோ சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடனஅ 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டிருக்கும் இசட்10 ஸ்மார்ட்போனில் மெமரியை நீட்டிக்கும் வசதி மற்றும் 3225 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
விவோ இசட்10 சிறப்பம்சங்கள்:
– 5.99 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஃபன்டச் ஓஎஸ் 3.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, ஆம்னிவிஷன் OV16880 சென்சா், PDAF
– 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3225 எம்ஏஹெச் பேட்டரி
விவோ இசட்10 ஸ்மார்ட்போன் புளு, பிளாக் மற்றும் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் விவோ இசட்10 விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், முதற்கட்டமாக தமிழ் நாடு, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.
SHARE