அண்மையில் இலங்கை கிரிக்கெட் வீரரான திலகரத்ன தில்ஷான் பாடல்களை இயற்றிஇணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இதேபோல் சசித்திரவும் தனது இரண்டாவது பாடலை பதிவேற்றம் செய்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் சசித்திர சேனநாயக்க தனதுஇரண்டாவது பாடலை இயற்றியுள்ளார்.
குறித்த பாடலானது முகப்புத்தகத்திலும் இணையத்தளங்களிலும் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
தனது இரண்டாவது பாடலுக்கு ‘Ruhiru Bindu Kiri Rasata Harawa’ என பெயரிட்டுள்ளார்.
இந்த பாடலானது அம்மாக்களின் அன்பை வெளிகாட்டுவது போல் இயற்றப்பட்டுள்ளது.
சசித்திர சேனநாயக்க தனது அறிமுக பாடலை 4 மாதங்களுக்கு முன்னர்வெளியிட்டிருந்தார்.
இந்த பாடலானது அவரது உத்தியோகப்பூர்வ வலைத்தளமான முகப்பத்தகத்தில் நேற்றைய தினம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.