இஞ்சியும், 5 நன்மைகளும்!

274

சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சியில் பல்வேறு மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளன.

100 கிராம் இஞ்சியில் உள்ள சத்துக்கள்

கொலஸ்ட்ரால் கிடையாது, சோடியம் 13 கிராம், கார்போஹைட்ரேட் 18 கிராம், நார்ச்சத்து 2 கிராம், சர்க்கரைசத்து 1.7 கிராம், புரோட்டின் 1.8 கிராம், விட்டமின்ஏ, கால்சியம் 1 சதவீதம், விட்டமின் டி, விட்டமின்பி12, விட்டமின் பி6, இரும்புசத்து 3 சதவீதம்.

5 பயன்கள்

தேநீர் மற்றும் சில உணவுகளில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் இஞ்சியில், 40 விதமான, ‘ஆன்டி ஆக்சிடென்ட்’கள் உள்ளன. இஞ்சியில் உள்ள இந்த ஆன்டி ஆக்சிடென்ட், வயோதிகத்தை தாமதப்படுத்தி தோலுக்கு புத்துணர்வு தருகிறது.

உடலில் உள்ள நஞ்சை வெளியேற்றுவதோடு, சீரான ரத்த ஓட்டத்திற்கு இஞ்சி உதவுகிறது.

தோலின் வெளிப்புறத்தில் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் கொப்புளங்கள், வெடிப்புகள், பருக்களை குணப்படுத்தும் தன்மை இஞ்சிக்கு உண்டு.

வெட்டுக்காயத் தழும்புகளில் இஞ்சி விழுதை தொடர்ந்து தடவினால் தழும்புகள் மாறும்.

அரைத்த இஞ்சி விழுதுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்த கலவையை தொடர்ந்து தோலில் தடவி வந்தால், நாளடைவில் தோல் பளபளப்பாக ஆரோக்கியமாக இருப்பதை காணலாம்.

SHARE