இடமாற்றம் பெற்ற அதிபருக்கு சேவை நலன் பாராட்டு விழா!

271

மன்னார் கற்கிடந்த குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற பாடசாலையின் முன்னாள் அதிபர் பேதுரு பாக்கியநாதனின் சேவை நலன் பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு, நேற்று (15) பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

யுத்த காலப்பகுதியில் இருந்து கடந்த 15 வருடங்களாக இந்த பாடசாலையில் ஆளுமை மிக்க அதிபராக கடமையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற அதிபர் பேதுரு பாக்கியநாதன் ஆற்றிய சேவை தொடர்பாக கருத்துக்கள் இதில் முன் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அதிபரை பாடசாலை மாணவர்கள், பெற்றோர், கிராம மக்கள் பாராட்டியதோடு, நினைவு சின்னங்களையும் வழங்கி தங்க மேதிரம் அணிவித்து கௌரவித்துள்ளனர்.

இறுதியதாக பாடசாலையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தனது மாகாணசபை நிதி ஒதுக்கீட்டில் கொள்ளவனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி தளபாடங்களை பாடசாலை அதிபரிடம் வைபவ ரீதியாக கையளித்துள்ளார்.

இந்த நிகழ்விற்கு விருந்தினர்களாக அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ,சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் சுகந்தி செபஸ்ரியான் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-11 625-0-560-320-160-600-053-800-668-160-90-12 625-0-560-320-160-600-053-800-668-160-90-13 625-0-560-320-160-600-053-800-668-160-90-14

 

SHARE