இணையத்தளம் ஊடாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய நபரொருவர் கைது

199

அளுத்கம – தர்காநகர் பகுதியில் ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடைய இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது சந்தேக நபரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 24 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த மொஹமட் ஆதீல் மொஹமட் அமீஸ் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை , சந்தேக நபர் ஐ.எஸ்.அமைப்புடன் இணையத்தளம் ஊடாக தொடர்புடையவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE