இணையத்தை கலக்கிய வீடியோ

202

சுற்றுலா சென்ற இடத்தில் காதலியிடம் காதலை வெளிப்படுத்த முயன்றபோது பிரித்தானிய இளைஞரின் கையில் இருந்த மோதிரம் கால்வாய்க்குள் தவறி விழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானியர் சேர்ந்த ஜான் ட்ரன்னான் மற்றும் டானெல்லா ஆந்தோனி ஆகியோர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கம் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது, ஜான் தன்னுடைய காதலை டானெல்லாவிடம் வெளிப்படுத்த முயன்றுள்ளார்.

தன்னுடைய சட்டைப்பையில் வைத்திருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை வெளியில் எடுத்தபோது, கைதவறி அங்கிருந்த கால்வாய்க்குள் விழுந்து விடுகிறது.

அதனை வெளியில் எடுக்க அந்த ஜோடியினர் நீண்ட நேரம் போராடி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர்.

ஆனால் இதனை சிசிடிவியின் மூலம் பார்த்த பொலிஸார், பத்திரமாக மோதிரத்தை வெளியில் எடுத்து ஜோடியிடம் சேர்க்க முயன்றனர். ஆனால் அவர்களை பற்றிய தகவல் எதுவும் தெரியாததால், உதவி செய்யுமாறு இணையதளவாசிகளுக்கு கோரிக்கை வைத்து வீடியோவினை தங்களுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

இந்த வீடியோவானது இணையதளவாசிகளால் 20 ஆயிரத்திற்கும் அதிகமான முறை பகிரப்பட்டது. இதன் பலனாக அந்த வீடியோ சம்மந்தப்பட்ட காதல் ஜோடியின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, அவர்கள் இருவரும் தற்போது சொந்த நாட்டில் இருக்கிறார்கள். இந்த வீடியோவை பகிர்ந்த இணையதளவாசிகள் அனைவருக்கும் நன்றி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த ஜோடிகளின் புகைப்படத்தை வெளியிட்டு, விரைவில் அவர்கள் இருவரும் அமெரிக்கா திரும்ப உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

SHARE