இணையவாசிகளால் மிகவும் வெறுக்கப்பட்ட நபருக்கு ஏற்பட்ட சிக்கல்

172

அமெரிக்க தொழிலதிபரும் உயிர் காக்கும் மருந்துக்கு பெருந்தொகை நிர்ணயித்தவருமான Martin Shkreli பல்வேறு முறைகேடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

34 வயதாகும் Martin Shkreli மீது 8 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விசாரணையானது உயிர்காக்கும் மருந்துக்கு 5,000 சதவிகிதம் விலை அதிகரித்தது தொடர்பானது அல்ல என அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் தற்போதைய விசாரணையில் அவர் குற்றவாளி என ஆதாரப்பூர்வம் நிரூபிக்கப்பட்டால் அவர் நிறுவிய நிறுவனமானது சுமார் 65 மில்லியன் டொலர் வரை இழக்க நேரிடும் என சட்டத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு கைதாகி பின்னர் உடனடியாக பிணையில் வெளிவந்துள்ளார்.

Turing Pharmaceuticals எனும் இவரது நிறுவனமானது Daraprim எனப்படும் எச்.ஐ.வி நோய்க்கு பயன்படுத்தும் மருந்தை 13.50 டொலரில் இருந்து 750 டொலராக அதிகரித்தது.

இதனால் அமெரிக்கர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் கண்டனத்திற்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். மட்டுமின்றி இணையவாசிகளால் மிகவும் வெறுக்கத்தக்க மனிதர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

SHARE