இதயத்தில் இடம்பிடித்த நாடு சிறிலங்கா”வாம் – ஐ.நா பொதுச்செயலர்……

270

 

இதயத்தில் இடம்பிடித்த நாடு சிறிலங்கா”வாம் – ஐ.நா பொதுச்செயலர்……

தனது பணியை திறம்பட செய்யும் சிங்களம்.
ஜஸ் வைத்து கதைக்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரா…

ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கடந்த ஜனவரி முதலாம் நாள் புதிய ஐ.நா பொதுச்செயலராகப் பொறுப்பேற்ற பின்னர் அன்ரனியோ குரெரெசை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முதல்முறையாகச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் பலப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்ற ஐ.நா பொதுச்செயலர், மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு உதவ ஐ.நா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையராக பணியாற்றிய போது உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில், 1978ஆம் ஆண்டில் இருந்து தாம் பலமுறை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டதாகவும், சிறிலங்கா தமது இதயத்தில் இடம்பிடித்த நாடு என்றும் ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் தெரிவித்துள்ளார்.

 

SHARE