ஜேர்மனியில் ஒரு நபரிடம் இருந்து பணப்பையை திருடிச் சென்ற திருடன் ஒருவன் மீண்டும் அதை அவரிடமே திருப்பி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனி தலைநகர் பெர்லினில் Anton Sahlender என்பவர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது ஒருவரது பணப்பை (wallet ) திருடு போனது.
அதில் பணத்தை தவிர முக்கியமான சில ஆவணங்களும் வைத்திருந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு பிறகு அவருக்கு பார்சல் ஒன்று வந்தது. அதை பிரித்து பார்த்த AntonSahlenderக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
தொலைந்து போன பர்ஸ் பார்சலில் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த திருடன் 250 யூரோ பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
அது தவிர ஒரு சிறிய இதய வடிவத்தையும் அதனுடன் இணைந்து அனுப்பியிருந்தான். இதனால் Anton மகிழ்ச்சிடைந்துள்ளார்.
இது தொடர்பாக Anton Sahlender தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில், அவருக்கு என்னை விட அதிக பணம் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் இரக்க குணம் இல்லாத மனிதன் இல்லை. பணத்தை தவிர அனைத்தும் அப்படியே இருக்கிறது என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.