பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவர் நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்தவர். கருத்துவேறுபாடு காரணமாக தற்போது அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
மஞ்சுவாரியர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். திலீப்பை பிரிந்தபிறகு மீண்டும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
மஞ்சுவாரியரின் சிறுவயது தோழி அம்பிளிபாத்திமா. இவர் கோட்டையம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை செய்ய பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
இதுபற்றி தகவல் வெளியானதை தொடர்ந்து நடிகை மஞ்சுவாரியர் திடீரென்று தோழி அம்பிளிபாத்திமா வீட்டிற்கு சென்றார். அவரை பார்த்ததும் மகிழ்ச்சியில் அம்பிளிபாத்திமா திக்குமுக்காடினார்.
தோழியின் உடல்நிலையை விசாரித்த மஞ்சுவாரியர் அவரது சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் உதவி வழங்கினார்.
மஞ்சுவாரியர் அங்கு வந்துள்ள தகவல் பரவியதும் அவரது ரசிகர்கள் அந்த வீட்டுமுன்பு திரண்டுவிட்டனர். அவர்களை பார்த்து கை அசைத்தபடி மஞ்சுவாரியர் அங்கிருந்து விடைபெற்று சென்றார்.
மஞ்சுவாரியர் செய்த உதவி பற்றி அவரது தோழி அம்பிளிபாத்திமா கூறும்போது தெய்வம்போல நேரில் வந்து மஞ்சுவாரியர் செய்த உதவியை என்னால் மறக்கமுடியாது. அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை என்றார்.