ot
பிரபல தொலைக்காட்சியில் சமூகம் சார்ந்த ஒரு நிகழ்ச்சியை நடத்தி வந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால், திடீரென்று இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டார்.
இவர் ஏன் இதில் இருந்து விலகினார் என்று இன்று வரை எல்லோரும் தங்களுக்கு தெரிந்த ஒரு தகவலை கூறி வருகின்றனர். இதற்கு தற்போது அவரே விளக்கம் அளித்துள்ளார்.
இதில் அவர் கூறுகையில் ‘என் மகள் அமெரிக்காவில் இருக்காங்க. அவங்களைப் பார்க்க அமெரிக்கா போறேன். ஒரு மாசம் நான் இல்லாதப்பவும் ஒளிபரப்புற அளவுக்கு நிகழ்ச்சியை ஷூட் பண்ணிடுங்க, நான் இயக்குநரிடம் மூணு மாசத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். ‘எடுத்துவெச்சுட்டோம்… எடுத்துவெச்சுட்டோம்’ என அவர் சொல்லி கொண்டே தான் இருந்தார்.
ஆனால், கடைசி வரை ஒரு எபிசோடு கூட முன்கூட்டியே ஷூட் பண்ணவில்லை. திடீரென்று, ‘நீங்க அமெரிக்கா போகக் கூடாது. நிகழ்ச்சியை நடத்திக் கொடுங்க’னு சொன்னாங்க. நான் முடியாது என்று சொல்லிட்டேன். இதுக்கு மேலயும் அமைதியா இருக்க வேண்டாம்னு நிகழ்ச்சியில் இருந்து விலகிட்டேன்’ என்று பிரபல வார இதழ் ஒன்றில் கூறியுள்ளார்.