விஜய் சேதுபதி மிகவும் எளிமையானவர். மனதில் பட்டதை மிக அழகாக பேசுபவர். அவர் பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விவாதத்தில் கலந்துக்கொண்ட இவர் ‘என் மகனிடம் என்னை ஈர்க்கவோ, அல்லது ஆசிரியரை ஈர்க்கவோ படிக்காதே.
உனக்கு பிடித்தால் படி, இல்லையென்றால் ஸ்கூலுக்கே போகாதே என்று கூறினேன், மேலும், நீ ஸ்கூலுக்கு செல்வது உன்னை சுற்றி இருக்கும் மாணவர்களிடம் நீ நல்ல முறையில் பழக வேண்டும்.
படிப்பை விட மற்றவர்களிடம் நீ வைத்திருக்கும் பழக்க வழக்கம் தான் உன்னை உயர்த்தும், அது தான் உன்னை யார் என்று காட்டும்’ என அறிவுரை கூறியதாக விஜய் சேதுபதி பேசினார்.