நடிகர் கீர்த்தி சுரேஷ் வந்த வேகத்திலேயே ரசிகர்களின் அன்பை வெகுவாக சம்பாதித்து விட்டார். அவருக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால் அவரின் சில குறும்பான விசயங்களை சிலர் கலாய்த்து வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு என நடித்து வரும் அவர் தற்போது மகாநதி படத்தில் நடித்து வருகிறார். மறைந்த நடிகையர் திலகமான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான இதில் கீர்த்தி தான் சாவித்திரி.
விசயம் என்னவெனில் நடிகை சாவித்திரி எப்போதும் தன் படங்களில் உடன் நடிப்பவர்களுக்கு தங்க காசுகளை அன்பளிப்பாக கொடுப்பாராம். இது தான் அவரின் ரியாலிட்டி என்பார்கள்.
இப்படத்தில் கீர்த்தி தன்னுடன் நடித்தவர்களுக்கு தங்க காசுகளை பரிசாக கொடுத்திருக்கிறாராம். படத்தில் சாவித்திரியாக கீர்த்து நடித்தாலும், தற்போது அந்த குணத்தை உண்மையாகவே நிஜவாழ்கையிலும் செய்துகாட்டியிருப்பதால் பரிசு பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்தியுள்ளனர்.