இது அதிகம், காப்பாற்றுங்கள்- புலம்பும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்

247

ரஜினியின் 2.0 படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கி வருபவர் ஷங்கர். இவருடைய படங்கள் என்றாலே எப்போதுமே ரசிகர்கள் தனி எதிர்ப்பார்ப்பில் காத்திருப்பர். படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இதுவரை யாரும் செய்யாத புரொமோஷன் விஷயங்களை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் GST வரியையும் தாண்டி மாநிலம் விதித்துள்ள வரிக்காக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இயக்குனர் ஷங்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 48-58% அதிக வரி, தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் என்று டுவிட் செய்துள்ளார்.

மாநில வரியை எதிர்த்து அனைத்து திரையரங்குகளும் இன்று முதல் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE