தைவானில் காப்பக பொறுப்பாளர் ஒருவர் தனது பொறுப்பில் உள்ள வயதான பெண்மணி ஒருவரை தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
11 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அந்த பொறுப்பாளர் வயதான பெண் மணி ஒருவரை தலையில் சரமாரியாக அடிக்கிறார்.
பயந்து போன அவர் தள்ளாடிய படியே கட்டில் கம்பியை பிடித்தவாறு மெதுவாக நகர்ந்து செல்கிறார்.
எழுந்து நடக்க கூட முடியாத நிலையில், அவர் அந்த வயதான பெண்ணை மீண்டும் கட்டிலில் ஏறி படுத்துக்கொள் என அடிக்கிறார்.
பேஸ்புக்கில் வைரலாகி வரும் இந்த அதிர்ச்சி வீடியோவை 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
“இதோ நகரத்தில் ஒரு இடம். இது போன்று உங்களுக்கும் நடக்கலாம்” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த நபருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர்.