இது தான் இளைய தளபதி ஸ்டைல்- ரசிகர்கள் பெருமிதம்

301

இது தான் இளைய தளபதி ஸ்டைல்- ரசிகர்கள் பெருமிதம் - Cineulagam

இளைய தளபதி விஜய் எல்லோரிடத்திலும் மிகவும் மரியாதையுடன் நடந்துக்கொள்பவர். அவர் ஒரு நாளும் இவர் பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற வித்தியாசமே பார்க்க மாட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அஞ்சனாவின் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நேற்று நடந்தது.

அனைவரும் எதிர்ப்பாராத விதமாக விஜய் சர்ப்ரைஸ் விருந்தினராக வர, அங்கிருந்தவர்கள் அனைவரும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர். சின்னத்திரையில் இருப்பவர் என்று பார்க்காமல் அன்பிற்காகவும், அழைப்பிற்காகவும் வந்த விஜய்யை அவருடைய ரசிகர்கள் எப்போதும் போல் கொண்டாடி வருகின்றனர்.

SHARE