இதை குடித்தால் மூன்று மாதத்தில் இப்படி ஒரு மாற்றம் நடக்குமா?

183

நோய் தொற்றுக்களின் தாக்கத்தினால் பாதிப்படையாமல் இருக்க நமது உடம்பிற்கு நோயெதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமாகும்.

எனவே நமது உடம்பின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த இயற்கையான ஜூஸ் இதோ!

தேவையான பொருட்கள்
  • கரும்புச்சாறு – 1 டம்ளர்
  • இஞ்சி ஜூஸ் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை

கரும்பை சிறிய துண்டுகளாக நறுக்கி அதை நன்றாக அரைத்து, அதில் 1 டம்ளர் அளவு சாற்றை எடுத்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாற்றினை கலந்தால் ஜூஸ் ரெடி.

பருகும் முறை

இந்த ஜூஸை காலையில் உணவு சாப்பிட்ட பின் குடிக்க வேண்டும். அதுவும் இந்த ஜூஸை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று 3 மாதங்கள் தொடர்ந்து தவறாமல் குடிக்க வேண்டும்.

இந்த ஜூஸை குடித்து வந்தால், எந்த நோயும் உடலைத் தாக்காதவாறு உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

நன்மைகள்
  • கரும்புகளில் நொதித்த சர்க்கரை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளது. இது உடலினுள் உள்ள செல்களுக்கு பாதுகாப்பு ஊட்டமளித்து, நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
  • இஞ்சியில் உள்ள பீட்டா கரோட்டீன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, நோய்கள் நம்மை அண்டாமல், உடலைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குகிறது.
SHARE