இதை சாப்பிட்டால்.. கடுமையான உடல்வலி உடனே போய்விடும்

229

அனைவருக்கும் இயல்பாக ஏற்படும் கடுமையான உடல் வலியை போக்க ஒருசில பொருட்களை சாப்பிடுவதுடன், சில வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

உடல் வலியை போக்க என்ன சாப்பிட வேண்டும்?
  • உடல் வலி மற்றும் அதிக மன அழுத்தம் உள்ளவர்கள், செர்ரி ஜூஸை குடித்து வந்தால், சதைகளில் உண்டாகும் கடுமையான வலியை குறைக்கும்.
  • ப்ளூ பெர்ரி ஜூஸை உடற்பயிற்சி செய்வதற்கும் முன் குடித்தால், சதைகள் சேதமாவதை தடுப்பதுடன், மன அழுத்தமும் குறையும்.
  • சிவப்பு மிளகாய்களை மிக்ஸியில் போட்டு ஒன்று இரண்டாக, முழுவதும் பொடியாக்காமல் அரைத்து, உணவுகளில் சேர்த்து சாப்பிட்டால் உடல் வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • தொடர்ச்சியாக உடல்வலி இருப்பவர்களுக்கு விட்டமின் D குறைபாடு ஏற்படும். அதனை போக்க மீன், முட்டை போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
  • உடல் வலியை தடுத்து, தசைகளின் செயல்பாட்டை சீராக்க மெக்னீசியம் சத்து மிகவும் அவசியம். எனவே வாழைப்பழம், பாதாம், பிரவுன் அரிசி ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.
உடல் வலியை போக்க என்ன செய்யலாம்?
  • ஐஸ் அல்லது சூடான நீரில் ஒத்தடம் கொடுத்து வந்தால், உடல் வலியிலிருந்து உடனடியாக விடுபடலாம்.
  • உடல் வலியிலிருந்து விடுபட நல்ல உறக்கம் தேவை. எனவே தினமும் போதுமான நேரம் தூங்க வேண்டியது மிகவும் அவசியம்.
SHARE