இதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் இப்படி ஒரு அற்புதம் நடக்குமா?

203

அன்றாடம் நாம் சாப்பிடும் சத்துக்கள் நிறைந்த காய்கறி மற்றும் பழங்கள் தான் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

அந்த வகையில் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வாழைப்பழம் மற்றும் இலவங்கப்பட்டை முக்கிய பங்கினை வகிக்கிறது.

தேவையான பொருட்கள்
  • வாழைப்பழம் – 1
  • இலவங்கப் பட்டை – 1/2 டீஸ்பூன்
  • தண்ணீர் – 1 லிட்டர்
செய்முறை

ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீரை ஊற்றி, அது நன்றாக கொதித்த பின் வாழைப்பழம் மற்றும் இலவங்கப் பட்டையின் பொடியை போட்டு, சிறிது நேரம் கழித்து எடுக்க வேண்டும்.

இந்த வாழைப்பழ டீயை இரவு உணவு சாப்பிடுவதற்கு முன் 1 டம்ளர் குடித்து வர வேண்டும்.

நன்மைகள்
  • வாழைப்பழம் கலந்த இந்த டீயில் நமது உடம்பிற்கு தேவையான பொட்டாசியம், மெக்னீசியம், விட்டமின் A, B, B6 போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
  • இரவில் உணவு சாப்பிடுவதற்கு முன் இந்த வாழைப்பழ டீயை குடித்தால், இரவில் ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, ஆழ்ந்த தூக்கம் ஏற்படும்.
  • இலவங்கப் பட்டை பொடி, சீரான செரிமான பிரச்சனைக்கு தீர்வாக உள்ளது. எனவே இந்த டீயை குடிப்பதால், செரிமான பிரச்சனையால் ஏற்படும் வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது.
  • விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் சத்துக்கள் அதிகமாக நிறைந்த இந்த டீயை நாம் குடித்து வந்தால், நமது உடலின் எனர்ஜி சக்திகள் அதிகரித்து, புத்துணர்ச்சி கிடைக்கிறது.
  • நாம் மன அழுத்தத்தில் இருக்கும் போது, இந்த வாழைப்பழ டீயை குடித்து வந்தால், ஒருவித அற்புதமான உணர்வு ஏற்படுவதுடன், மன அழுத்த பிரச்சனையும் குறையும்.

SHARE