இத்தனை வருடம் கஷ்டத்தில் இருந்தாரா- யோகிபாபு குறித்து யாரும் அறியாத பக்கங்கள்

226

யோகிபாபு இன்று திரையில் தோன்றினாலே விசில் சத்தம் அதிர்கின்றது. ஆனால், இந்த வெற்றியை அடைய யோகிபாபு எத்தனை கஷ்டங்களை தாங்கியுள்ளார் தெரியுமா?, இவரின் தந்தை ராணுவத்தில் இருந்தவர்.

அதனாலேயே சிறுவயதிலிருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று எண்ணியுள்ளார், ஒரு கட்டத்தில் இவரால் ராணுவத்தில் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால், அடுத்த பயணத்தை யோக்கி செல்வோம் என சினிமாவை தேர்ந்தெடுத்துள்ளார், இதற்காக இவர் முயற்சி செய்த போது தான் லொல்லு சபா ஷோ கிடைத்துள்ளது.

ஆனால், அங்கும் இவருக்கு ஒரு வசனம் பேசுவது போல் எந்த காட்சியும் கிடைக்காதாம், கூட்டத்தில் நிற்பது போல தான் காட்சிகள் கிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட 13 வருடம் சினிமாவில் ஒரு வெற்றிக்காக போராடியுள்ளார், பல அலுவலங்கள் ஏறி இறங்கியுள்ளார்.

அப்போது தான் யோகி படப்பிடிப்பு தளத்திற்கு இவர் வர, அமீர் உடனே இவரை ஒரு புகைப்படம் எடுக்க கூறியுள்ளார்.

அதன் பிறகு தான் அந்த படத்தில் இவர் கமிட் ஆக, அதிலிருந்து பாபு..யோகி பாபுவாகியுள்ளார். தற்போது வரை தனக்கு எந்த பெரிய நோக்கமும் இல்லை, மக்களை சிரிக்க வைக்க வேண்டும், அது போதும் என எளிமையாக கூறுகிறார்.

SHARE