இத்தாலியில் சட்டவிரோத பாடசாலை நடத்திய இலங்கை தம்பதி கைது

273

இத்தாலியில் சட்டவிரோதமாக பாடசாலை நடத்திய இலங்கை தம்பதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தாலி மிலானோஹி பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை தம்பதி ஒன்று தாங்கள் வசிக்கும் சிறிய வீட்டில் சட்டவிரோதமான முறையில் பாடசாலை ஒன்றை நடத்தி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பாடசாலை நடத்திய இலங்கை தம்பதி மற்றும் குறித்த பாடசாலைக்கு பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் அந்த பகுதியின் பிரபல பத்திரிகைகள் பலவற்றில் செய்தி வெளியாகியுள்ளதனை தொடர்ந்து அங்கு வசிக்கும் இலங்கையர்கள் வெட்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த இலங்கை தம்பதியனருக்கு ஆசிரியர் தொழிலுக்கான எவ்வித தகுதியும் இல்லாத நிலையில், தாம் வசிக்கும் 40 மீற்றர் அளவிலான சிறிய வீட்டின் ஒரு பகுதியில் 3 வயது முதல் 8 வயது வரையிலான இலங்கை பிள்ளைகளுக்கு கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அதற்காக மாதாந்தம் ஒரு பிள்ளையிடம் 250 யூரா என்ற கணக்கில் அறவிட்டுள்ளனர். இந்த தம்பதிக்கு உதவிய மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகுதியின்றி ஆசிரியர் தொழிலில் ஈடுபடுதல், அனுமதியின்றி பாடசாலை நடத்தி செல்தல், தமது வீட்டினுள் பாடசாலை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகிய பல குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இந்த நபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அப்பாவி பெற்றோர்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் மோசடி செய்யும் மற்றுமொரு குழுவினர் மலானோஹி பிரதேசத்தின் இன்னும் பாடசாலையை நடத்தி செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE