இலங்கையிலிருந்து அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பாரியளவான போதை மாத்திரைகள் இத்தாலியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
37.5 தொன் எடை கொண்ட பாரியளவான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவற்றின் பெறுமதி 81.96 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போதை மாத்திரைகள், ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களின் ஜிஹாத் போராளிகளுக்கு மூர்க்கத்தனத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்துவதாக இத்தாலியின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டு இங்கிருந்து ஷம்போ போத்தல்கள் என்ற பெயரில் மறைத்து இத்தாலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் இத்தாலியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.